Oho Megam Vandhadho Song Lyrics

ஒஹோ மேகம் வந்ததோ பாடல் வரிகள்

Mouna Ragam (1986)
Movie Name
Mouna Ragam (1986) (மௌன ராகம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Vaali
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ

யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது
நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது
நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ

கால்கள் எங்கேயும் ஓடலாம் காதல் இல்லாமல் வாழலம்
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம்
நாம் இன்னாளிலே சிட்டாக மாறலாம்

வா செவ்வாணம் எங்கும் ஜிவ்வென்று ஏறலாம்
நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்

வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம்

வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ