Kannai Parikkum Vannam Song Lyrics
கண்ணைப் பறிக்கும் வண்ணம் பாடல் வரிகள்
- Movie Name
- Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
- Music
- Ghantasala
- Singers
- A. M. Rajah, P. Leela
- Lyrics
- V. Seetharaman
கண்ணைப் பறிக்கும் வண்ணம்
கால் பூட்ஸைத் தேய்த்தும் என்ன
மின்னலிடியுடனே மழையும் வரப்போகுதே...
மானங் கறுத்தாலென்ன மழையுமே வந்தாலென்ன
தானங் கொடுத்த குடை தானிங்கே இருக்கையிலே
வண்டுகளெல்லாம் வான மழையில்
வெண்ணிறமாகுதே.....தன்னிறமாறுதே...
விண்ணின் மீது உலவும் மேகம்
கண்டு மயிலும் மறைந்தோடுதே
விரிந்த தோகை தானே நனைந்து
சுருங்கிச் சுருங்கிப் போனதே
அதிசயமே ஆச்சரியமே
இதனைப் போலவே ஏது பூமியில்
முகிலைக் கண்டு மயக்கங் கொண்ட
மயிலின் இதயம் அறிவாருண்டோ
மலரை நாட அஞ்சும் வண்டின்
மனது தெரியவில்லையோ
வண்டும் மயிலும் ஒன்றுடன் ஒன்று
சொந்தம் கொண்டாடுதே இன்பம் தேடுதே....