Neeyethan enakku Song Lyrics

நீயே தான் எனக்கு பாடல் வரிகள்

Kudiyirundha Koyil (1968)
Movie Name
Kudiyirundha Koyil (1968) (குடியிருந்த கோயில்)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

கொடுத்து வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன் நீயே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ நாமறிவோமே
(நீயேதான்…)

கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ நாமறிவோமே

நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ நாமறிவோமே
(நீயேதான்…)