Damma Damma Song Lyrics

டம்மா டம்மா பாடல் வரிகள்

Vettai (2012)
Movie Name
Vettai (2012) (வேட்டை)
Music
Yuvan Shankar Raja
Singers
Haricharan, Na. Muthukumar, Swetha Mohan, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா
ஊரு கண்ணு ஒறவு கண்ணு சுத்தி போடணும்
ஏழு எட்டு மாசத்துல பெத்து போடணும்

என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா...


சந்திரன் வந்து சூரியன் வந்து
வாழ்துப் பாட்டு பாடணுங்க
நட்சத்திரப் பூப் பறிச்சு
அட்சதையா தூவுங்க
சந்தனம் எங்க குங்குமம் எங்க
மாத்தி மாத்தி பூசணுங்க
பள்ளியற போகும் முன்னே
பாடம் சொல்லி அனுப்புங்க

சேத்து வெச்ச கனவ எல்லாம்
மிச்சம் இன்றி பேசுங்க
மீச குத்தி காயம் வந்து
முத்த மருந்து பூசுங்க

அடி ஆத்தி ஆத்தி இவ அசத்தப் போறா
ஒரு மால மாத்தி ஒன்ன ஒசத்த போறா...


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றானென்றது
பூரண பொற் குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன்
தோழி நான்...

மந்திரம் இல்ல தந்திரம் இல்ல
மாறி மாறி பாக்குதுங்க
ரெண்டு கண்ணு தாக்கி தாக்கி
துண்டு துண்டா ஆக்குது
வெயிலும் இல்ல மழையும் இல்ல
வான வில்லும் பூக்குதுங்க
நெஞ்சுக்குள்ள நெரந்தரமா
வண்ணம் அள்ளி பூசுது ஹே...
பம்பரமா ஒரு கொலுசு
ரெக்க கட்டி ஆடுது
பக்கத்துல ஒரு மனசு
சுத்தி சுத்தி ஓடுது

ஓன் காதல் சொல்ல ஒரு வார்த்த வேணா
இந்த பார்வ போதும் அத மாத்த வேணா...

என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல
என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல