Varathappa Varathappa Song Lyrics

வரதப்பா வரதப்பா பாடல் வரிகள்

Babu (1971)
Movie Name
Babu (1971) (பாபு)
Music
M. S. Viswanathan
Singers
Lyrics
வரதப்பா வரதப்பா 
கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா

எங்கேப்பா...

வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

நகையும் நட்டும் போட்டிருந்தா 
சொர்ண லட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா
தான்ய லட்சுமி

டாண்ட டண்டட டண்டா டண்டட டண்டா 
டாண்டாண்டாண்டா

நகையும் நட்டும் போட்டிருந்தா 
சொர்ண லட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா
தான்ய லட்சுமி
மானங்காக்க துணிஞ்சு நின்னா வீர லட்சுமி
மானங்காக்க துணிஞ்சு நின்னா வீர லட்சுமி
எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா
விஜய லட்சுமி 

எத்தனை லட்சுமி பாருங்கடா... 
இவ என்ன லட்சுமி கூறுங்கடா... 

எத்தனை லட்சுமி பாருங்கடா... 
இவ என்ன லட்சுமி கூறுங்கடா... 
நம்ம அத்தனை பேருக்கும் படியளக்கும் 
அன்ன லட்சுமி ஆகுமடா

ஆமா அன்ன லட்சுமி ஆகுமடா

வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா

தண்டைச் சத்தம் கலகலன்னு 
முன்னால் வருகுது
வாழைத் தண்டு போல கால் நடந்து 
பின்னால் வருகுது 

டாண்ட டண்டட டண்டா டண்டட டண்டா 
டாண்டாண்டாண்டா

பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது
பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது
பேச்சைக் கேக்கிறப்போ வந்த மயக்கம்
தானாக் குறையுது 

சாதம் போல சிரிக்கிறா... 
மீன் கொழம்பு போல மணக்குறா...
ரகசியமா ஏதும் சொன்னா 
ரசத்தைப் போல கொதிக்கிறா

ஆஹா ரசத்தைப் போல கொதிக்கிறா
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது 
அது அனுமந்த ராவ்... ஆ...
அனுமந்த ராவ் அவியலிலே கலந்திருக்குது 

மேரியம்மா கேரியரில் எரா இருக்குது
மேரியம்மா கேரியரில் எரா இருக்குது
அது பத்மநாப அய்யர் வீட்டு
குழம்பில் கெடக்குது

சமையலெல்லாம் கலக்குது... 
அது சமத்துவத்த வளர்க்குது...
ஜாதி சமய பேதமெல்லாம் 
சோத்தக் கண்டா பறக்குது

ஆஹா சோத்தக் கண்டா பறக்குது
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா
அய் அய் அய்சலக்கா அய் அய் அகரிபச்சா
அய்சலக்கா அகரிபச்சா அய்சலக்கா அகரிபச்சா 
அய்சலக்கா அகரிபச்சா அய்சலக்கா அகரிபச்சா 
ஹே...