Naan Sonnathum Malai Song Lyrics

நான் சொன்னதும் மழை பாடல் வரிகள்

Mayakkam Enna (2011)
Movie Name
Mayakkam Enna (2011) (மயக்கம் என்ன)
Music
Yuvan Shankar Raja
Singers
Naresh Iyer, Saindhavi
Lyrics
Selvaraghavan
நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா...நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ...களவாணி..
ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற....
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு...ஆடு...

ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கண்ணி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ....வரியாடி...

கருவாட்டு கொழம்பா.... நீயும்.......ருசி ஏத்துற....

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது