Rajadhi Raja Song Lyrics

ராஜாத்தி ராஜா நானே பாடல் வரிகள்

Nimirnthu Nil (2014)
Movie Name
Nimirnthu Nil (2014) (நிமிர்ந்து நில்)
Music
G. V. Prakash Kumar
Singers
Lyrics
Kabilan
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமி என் சொந்த வீடு
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

ஹே காலம் உந்தன் கையில் உண்டு வீரம் கொண்டால் வெற்றி உண்டு
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
பாதி கண்ணால பாரு பொண்ணு சாதி பாக்காம காதல் பண்ணு
வாழும் போதே நீ வாழ எண்ணு வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு
உலகம் முழுக்க ஜாலி உனக்கு எதுக்கு வேலி
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

ஹே நட்பு என்னும் கூட்டுக்குள்ளே கூடி வாழ்வோம் குருவி போலே
பூமி மேல பூத்திருப்போம் வானவில்லின் வண்ணம் போலே
நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா
நாளை உன் வாழ்க்கை தோர்க்காதடா
வீட்டு பிள்ளையா போல் நீ இருந்து
கூண்டு கிளி போல வாழாதடா
இரவும் பகலும் ஆடு இளமை உனக்கு ஈடு
உலகம் உனது வீடு தனிமை எதுக்குடா
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஹே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு
ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமியும் சொந்த வீடு