Vande Nee Vaa Vaa Song Lyrics
வண்டே நீ வா வா பாடல் வரிகள்
- Movie Name
- Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
- Music
- Ghantasala
- Singers
- A. G. Rathnamala
- Lyrics
- Kuyilan
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு
இன்பம் கொண்டு போ போ
வண்டே நீ வா வா மணமலர் தேடி...
தென்றலில் ஆடும் தேன் வழிந்தோடும்
தீஞ்சுவை கூடும் வாசமுல்லை நாடி
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...
மாங்கிளை மீதே பூங்குயில் பாடும்
வானவில்லின் வர்ணம் போல் ஆடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு....
மாமதி கண்டு தாமரை வாடும்
வானில் கதிரவன் கண்டால் விரிந்தாடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...