Kandaen Kandaen Song Lyrics

கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்

Madhurey (2004)
Movie Name
Madhurey (2004) (மதுர)
Music
Vidyasagar
Singers
Madhu Balakrishnan, Sadhana Sargam
Lyrics
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்

நீ வளையல் அனியும் கரும்பு
நான் அழகை பழகும் எரும்பு

நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு

சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு

பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலியாடு நானும் இல்லை தேன் கூடு

ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு

ஆஹா ….

ம்ஹும் …

மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க

ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க

எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட
இமயோரம் கோடி மின்னல் நீ காட்ட

தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட

ஜனமும் மரணமும் பல முரை வருமென
தலயனை நினைவூட்ட

கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே அவள் அழகுகளை

மிக அருகினிலே அவன் இனிமைகளை

தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்