Kaadhal Konjam Song Lyrics

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம் பாடல் வரிகள்

Pachaikili Muthucharam (2007)
Movie Name
Pachaikili Muthucharam (2007) (பச்சைக்கிளி முத்துச்சரம்)
Music
Harris Jayaraj
Singers
Naresh Iyer
Lyrics
Thamarai
காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்
(காதல் கொஞ்சம்)

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சமுள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல்தொட இனி கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
(காதல் கொஞ்சம்)

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில்கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே
தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல் கொஞ்சம்)
(அலுங்காமல் உனை)