Chudithar Aninthu Song Lyrics

சுடிதார் அணிந்து பாடல் வரிகள்

Poovellam Kettuppar (1999)
Movie Name
Poovellam Kettuppar (1999) (பூவெல்லாம் கேட்டுப்பார்)
Music
Yuvan Shankar Raja
Singers
Hariharan, Sadhana Sargam
Lyrics
Palani Barathi
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்

உன் பேரை மட்டும்தான் நான் விரும்பி கேட்கிறேன்

இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி

உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ

அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா

விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

பல கோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்

நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்

நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா

அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ

என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே