Chinna Vennila Song Lyrics
சின்ன வெண்ணிலா நீ பாடல் வரிகள்
- Movie Name
- Nalla Kaalam Poranthachu (1990) (நல்ல காலம் பொறந்தாச்சு)
- Music
- Shankar-Ganesh
- Singers
- S. P. Balasubramaniam
- Lyrics
- Vaali
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா
கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி (சின்ன)
யார் வளர்த்தது உயிர் யார் கொடுத்தது
அது யாரோ நினைவில்லையோ
வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட
ஒரு மேகம் வரவில்லையோ
நீதி தேவன் கண்கள் மூடிக் கொண்டதென்ன
நீயும் இன்று மாலை சூடிக் கொண்டதென்ன
நான் பாடும் பொருள் நீதானே
அறியாயோ அடி பொன் மானே......(சின்ன)
உண்மையானது இன்று ஊமையானது
சிறைவாசம் புரிகின்றது
உனை அழைக்குது தர்மம் உயிர் துடிக்குது
அதன் வாழ்வே தவிக்கின்றது
அன்னை தந்தை வாழ்க்கை
பிள்ளை கையில் தானே
பெற்ற நெஞ்சம் என்னை
வாழ்த்த வேண்டும் மானே
தோற்காது இந்த போராட்டம்
நீ பாரு வெற்றிக் கொடி நாட்டும்....(சின்ன)