Vidinthatha Pozhuthum Song Lyrics
விடிந்ததா பொழுதும் பாடல் வரிகள்
- Movie Name
- Pillai Paasam (1991) (பிள்ளை பாசம்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Ilaiyaraaja
- Lyrics
- Vaali
விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ முடிந்ததா இரவும் முடிந்ததா
அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே
அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா
இது ஏன் ஏன் புரியுமா………(விடிந்ததா)
சோலை மலரை எடுத்து அதை
பாலை நிலத்தில் எறிந்து பழி தீர்த்தானே ஏன்
சிற்பம் ஒன்றை வடித்து அது
சிதறும் போது துடித்து நிலை சாய்ந்தானே ஏன்
இது ஒருவன் பாவமா
பல உயிரின் சாபமா
விடை யார் சொல்வார்
அழுதால் தொழுதால் வருமோ……( விடிந்ததா)
காத்து இருக்கும் தந்தை ஒரு
காலனாகும் விந்தை இது ஏன் தேவா சொல்
கைகள் தனது கைகள் குத்தும் கண்கள்
தனது கண்கள் இது ஏன் தேவா சொல்
அன்று எதிரும் புதிருமாய்
இன்று உறவும் பிரிவுமாய்
உயிர் துடிக்க வைப்பதேன்
அழுதால் தொழுதால் வருமோ…….(விடிந்ததா)