Kadhal Kasukuthaiya Song Lyrics

காதல் கசக்குதயா பாடல் வரிகள்

Aan Paavam (1985)
Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
ஆண் : காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லவ்வுன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா

ஆண் : யாராரோ காதலிச்சு….ஊஉ….
யாராரோ காதலிச்சு
உருப்படல ஒண்ணும் சரிப்படல
வாழ்கையிலே என்றும் சுகப்படல
காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

ஆண் : தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம
வாழாம செத்தாங்க

ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா……
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லவ்வுன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா

ஆண் : எத்தனை சினிமா
எத்தனை டிராமா பாத்தாச்சு
எத்தனை டூயட்
எத்தனை டியூன் கேட்டாச்சு
எத்தனை பாட்டு
இத்தனை கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு
சக்தியும் கெட்டு நின்னாச்சு

ஆண் : கிட்டப்பா அந்த காலத்துல
காயாத கானகத்தே
பி யூ சின்னப்பா வந்த காலத்துல
காதல் கனி ரசமே
மன்மத லீலை எம் கே டி காலத்துல

ஆண் : நடையா இது நடையா
நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹலோ ஹலோ சுகமா
அட ஆமாம் நீங்க நலமா
எங்கேயும்தான் கேட்டோம்
அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள

ஆண் : இந்த கால இளைஞர்
செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச
தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேட கூடாது

ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா……..
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லவ்வுன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
கசக்குதயா கசக்குதயா