Pattu Varum Song Lyrics

பாட்டு வரும் என்ன பாடல் வரிகள்

Naan Aanaiyittal (1966)
Movie Name
Naan Aanaiyittal (1966) (நான் ஆணையிட்டால்)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
பாட்டு வரும் என்ன

பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்

ம்...ம்ஹும்... 

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் (இசை) 
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் பாட்டு வரும்

ஆ..ஹா....

பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்

பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே

பாட்டு வரும் பாட்டு வரும் 
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அஹ ஆஹாஹா அஹஹாஹா அஹஹாஹா ஹாஹா...