Vechukava Onna Song Lyrics

வச்சிக்கவா ஒன்ன மட்டும் பாடல் வரிகள்

Nallavanuku Nallavan (1984)
Movie Name
Nallavanuku Nallavan (1984) (நல்லவனுக்கு நல்லவன்)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
Gangai Amaran
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெட்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருனாளய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல
வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ஸ்
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெட்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல