Ponnaasai Kondorukku Song Lyrics

பொன்னாசை கொண்டோர்க்கு பாடல் வரிகள்

Muradan Muthu (1964)
Movie Name
Muradan Muthu (1964) (முரடன் முத்து)
Music
T. G. Lingappa
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பொன்னாசை கொண்டோர்க்கு 
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு 
கண்ணும் இல்லை 
இரு கண்ணும் இல்லை 

பொன்னாசை கொண்டோர்க்கு 
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு 
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை


பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா... ஆ...
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு மான் வேண்டுமா
புள்ளி மான் வேண்டுமா

குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா
நல்ல துணையாகுமா
சொல்லக் கூடாத ஆசை நெஞ்சில் 
வரலாகுமா அது முறையாகுமா

பொன்னாசை கொண்டோர்க்கு 
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு 
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை


வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா... ஆ...
வானத்தில் வெண் நில்வு ஒன்றல்லவா
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா
கவரி மானல்லவா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பெண்மை உறவாடுமா
தட்டிப் பறித்தே சென்றாலும் 
அது உயிர் வாழுமா இன்பம் பயிராகுமா

பொன்னாசை கொண்டோர்க்கு 
உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு 
கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
ஓஹொஹோ... ஓஹொஹோ... 
ஓஹொஹோ... ஓஹொஹோ... ஹய்...