Neeyum Naanum Song Lyrics

நீயும் நானும் வானும் பாடல் வரிகள்

Mynaa (2010)
Movie Name
Mynaa (2010) (மைனா)
Music
D. Imman
Singers
Benny Dayal, Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள

நடந்தா... அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா... கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா

ஏ... வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள


நாம நெனைச்சது நடந்துச்சு நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ

நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலே போதும் புள்ள

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
நீயும் நானும்


தெருக்கோடியில் கெடந்த வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொரளுதடா

இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா

ஹே ஹே காதல் தானே மாற்றம்
நம்மை உயரத் தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு
ஒன்னா கொண்டாடி போவோம் புள்ள

நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடந்திருச்சு

வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைச்சிருச்சு
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்குமே தடையும் இல்லை

ஓ பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..
நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா...