Nadagamellam Kanden Song Lyrics

நாடகமெல்லாம் கண்டேன் பாடல் வரிகள்

Madurai Veeran (1956)
Movie Name
Madurai Veeran (1956) (மதுரை வீரன்)
Music
G. Ramanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே

கன்னிப் பருவமெனும் கட்டழகுத் தேரினிலே ஆ..ஆ..
என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆ..ஆ…
அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ…
அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே ஏ..
உன்னழகைப் பார்த்திருக்கும் கண்ணே, ஸ்வாமி
உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா

ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே