Kumbakoname Konam Song Lyrics
கும்பகோணமே பாடல் வரிகள்
- Movie Name
- Shankar Guru (1987) (சங்கர் குரு)
- Music
- Chandrabose
- Singers
- K. S. Chithra, Malaysia Vasudevan
- Lyrics
- Vairamuthu
பெண் : கும்பகோணமே...கோணம்
இந்த குமரி சொன்னதே.....வேதம்
அடி ராமர் விட்டதே...பாணம்
இந்த மாமனுக்கு எங்கே...காணோம்
கும்பகோணமே கோணம்
இந்த குமரி சொன்னதே வேதம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்கு எங்கே காணோம்
ஆன்னா ஆவன்னா அயித்த மவன் பேரென்னா
இன்னா ஈயன்னா இளிச்ச வாயன் ஊரென்னா
சோனா சோவன்னா சோதிச்சு பாத்தா தப்பென்னா
கூன்னா கூவன்னா கும்மியடிப்போம் குப்பண்ணா
ஏய்...கும்பகோணமே கோணம்
இந்த குமரி சொன்னதே வேதம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்கு எங்கே காணோம்
மூக்கு முழி கொண்டவரு
முட்டைக்கோசு மன்னவரு
எங்களத்தான் கட்டிக்கிட்டா
என்ன செய்வார் மன்னவரு
அனுபவ ஞானமுள்ளதா..ஓஓஹோய்
அதுக்கொரு வீரமுள்ளதா..ஹொ...
வெத்திலையோ எங்கிட்டே
பாக்கு மட்டும் உங்கிட்ட
புகையிலை எங்கிட்டே
சுண்ணாம்பு உன்கிட்டே
பொடவக் கட்டும் பொம்பள
போட்டா செவக்கும்
அடியே இந்த ஆளுக்கு
லேசா செவக்கும்
ஆண் : ஆளச் சுத்தும் வண்டுகளே..ஏஏ..
ஏய்....என் கால சுத்தும் நண்டுகளே
மானம் வெட்கம் ரோஷமெல்லாம்
வாடகைக்கு விட்டவளே....ஹே..ஹே...
ஆடிக் கொஞ்சம் காட்டட்டுமா
ஆழம் என்ன பாக்கட்டுமா எப்பிடி எப்பிடி
கும்பகோணமே கோணம்
அது குமரிக்கெங்கே காணோம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்குண்டு மானம்
ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன
ஆண் : ஆட வந்த அல்லிகளே
அர்ஜுனனை பாருங்கடி
கேலி செய்ய வந்தவளே
தாலி செய்ய வந்தேனடி
வம்பிழுக்க வந்த பொம்பள நீ
பொம்பளையா நானும் நம்பல ஹொஹொஹோய்
சீமைத்துரை காளையடி ஜில்லாவுக்கே தெரியுமடி
வரிசநாட்டு வேங்கையடி வாழு கொஞ்சம் நீளமடி
கூடி வந்த பொண்ணுகளா கொழுப்ப பாரு ஏய்
மீசை அது பொய்யில்ல இழுத்து பாரு
கும்பகோணமே கோணம்
அது குமரிக்கெங்கே காணோம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்குண்டு மானம்
ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன
கும்பகோணமே கோணம்..பாடுங்கடி
அது குமரிக்கெங்கே காணோம்..ஒடுங்கடி
அடி ராமர் விட்டதே பாணம்..ஹாங்...
இந்த மாமனுக்குண்டு மானம்..ஹைய்யோ