Thegam Sirakadikkum Song Lyrics

தேகம் சிறகடிக்கும் பாடல் வரிகள்

Naane Raja Naane Manthiri (1985)
Movie Name
Naane Raja Naane Manthiri (1985) (நானே ராஜா நானே மந்திரி)
Music
Ilaiyaraaja
Singers
Jayachandran, K. S. Chithra
Lyrics
M. Metha
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
கா...தல் கீ...தம் பாடும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்

ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும்
தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும்
இதயமே...நலமா இளமையே...சுகமா
சோதனை...செய்யவோ தேன்மழை...பெய்யவோ
கா...தல் கீ...தம் பாடும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
கா...தல் கீ...தம் பாடும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்

நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும்
கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும்
அனுபவம்...புதிது அடைந்ததே...மனது
காதலின்...சீதனம் ஆனதே...பெண் மனம்
கா...தல் கீ...தம் பாடும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது...ம்ஹ்ம் பெண் மயில்...ம்ஹ்ம்
சேர்ந்தது...ம்ஹ்ம் ஓர் குயில்...ம்ஹ்ம்
கா...தல் கீ...தம் பாடும்
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்