Aayiram Erimalai Song Lyrics

ஆயிரம் எரிமலை பாடல் வரிகள்

Naalaiya Theerpu (1992)
Movie Name
Naalaiya Theerpu (1992) (நாளைய தீர்ப்பு )
Music
Manimekalai
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில் எரியும் எரியும்
நாட்டினை இதுவரை வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்
புயல் சீறிவரும், தடை சட்டங்கள் யாவையுமே மீறிவரும்
இந்த நாட்டுக்கு நாளைய தீர்ப்பினை கூறிவிடும்

எங்கும் ஊழல், எங்கும் லஞ்சம்,
நேர்மைக்கிங்கே எங்கும் பஞ்சம் கேட்க ஆளில்லையா
நேரில் நின்று கேள்வி கேட்போம்
போரில் நின்று நாட்டை காப்போம் வீரர் நாமில்லையா
திருடருக்கு சுதந்திரமா?
உழைப்பவர்க்கு தரித்திரமா?
உயர உயர புரட்சி கொடிகள் பறக்கவிடு

ஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில் எரியும் எரியும்
நாட்டினை இதுவரை வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்
புயல் சீறிவரும், தடை சட்டங்கள் யாவையுமே மீறிவரும்
இந்த நாட்டுக்கு நாளைய தீர்ப்பினை கூறிவிடும்

சட்டம் காக்கும் காவல் கூடம்
பெண்கள் கற்பை சூறை ஆடும் சொல்ல வெட்கமடா
கைது செய்து கூண்டில் ஏற்று
மக்கள் முன்னே தூக்கில் மாட்டு என்ன அச்சமடா
கொடுமையிது பொறுப்பதில்லை
ஒருகணமும் சகிப்பதில்லை
கொடுமை முழுதும் அழியும் வரையில் உறக்கமில்லை

ஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில் எரியும் எரியும்
நாட்டினை இதுவரை வாட்டிய கொடுமைகள் அழியும் அழியும்
புயல் சீறிவரும், தடை சட்டங்கள் யாவையுமே மீறிவரும்
இந்த நாட்டுக்கு நாளைய தீர்ப்பினை கூறிவிடும்

அச்சமில்லை இல்லை அச்சம்
அஞ்சி அஞ்சி என்ன மிச்சம் தோழர் வாருங்களேன்
ரெண்டில் ஒன்று பார்க்க வேண்டும்
நீதி தன்னை மீட்க வேண்டும் தர்மயுத்தம் இது
புதிய யுகம் விடிகிறது
பழைய கதை முடிகிறது
சிறையும் விலங்கும் உடையும் வரையில் போரிடுவோம்