Kadhal Indru Song Lyrics

காதல் இன்று இப்போது பாடல் வரிகள்

Maya Kannadi (1994)
Movie Name
Maya Kannadi (1994) (மாயக் கண்ணாடி )
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா
கண்டவுடன் பத்திக்கொள்ளும் காதல் இது
உள்ளத்திலே தொத்திக்கொள்ளும் வியாதி இது
உள்ளபடி காதல் இப்போ சுத்தம் இல்லே
உண்மை இதை சொன்னா ஒன்னும் குத்தமில்லே
ஒரு ஐஸ் கிரீம் பார்லரில் ஏசி த்யேட்டரில் காதல் முடிஞ்சு போகும்
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா

காதலியை இன்னொருத்தன் கட்டிக்கொண்ட போது
தாடி வளர்த்த தேவதாஸ் இன்று யாரும் இல்லடா
காதலிய விட்டு விட்டு பைத்தியமா மாறி
பாலைவனத்தில் சுற்றி திரியும் மஜ்னு யாரும் இல்லடா
உண்மை காதலே இன்று ஏதடா
பெண்ணும் ஆணுமே செய்யும் தவறடா
அன்புத் தோழனே கொஞ்சம் கேளடா
ஆசை என்பது காதல் இல்லடா
இன்று உள்ள காதலர்க்கு இன்னும் இந்த ஞானம் வர்லடா
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா

அன்று வந்த காதல் எல்லாம் ஆழமுள்ள காதல்
சாகும் வரைக்கும் மாறிடாமல் அது நிலைத்து நின்றது
காசு பணம் பார்த்துக்கிட்டு இன்று வரும் காதல்
காலை மலர்ந்து மாலை உதிரும் ஒரு பூவை போன்றது
மனதின் கணக்கிலே காதல் வளரலாம்
விதியின் கணக்கிலே அதுவும் விலகலாம்
ஒன்று சேர்வதால் காதல் உயர்ந்ததா
பிரிந்து போவதால் காதல் தாழ்ந்ததா
காதலெனும் மாயவலை கண்ணை கட்டி நம்மை ஆட்டுது
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா
கண்டவுடன் பத்திக்கொள்ளும் காதல் இது
உள்ளத்திலே தொத்திக்கொள்ளும் வியாதி இது
உள்ளபடி காதல் இப்போ சுத்தம் இல்லே
உண்மை இதை சொன்னா ஒன்னும் குத்தமில்லே
ஒரு ஐஸ் கிரீம் பார்லரில் ஏசி த்யேட்டரில் காதல் முடிஞ்சு போகும்
காதல் இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா
மேலில் நாம் தட்டி விடும் ஒரு தூசு போலடா