Penn Ponaal Song Lyrics

பெண் போனால் பாடல் வரிகள்

Enga Veettu Pillai (1965)
Movie Name
Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை)
Music
Viswanathan Ramamoorthy
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
பெண் போனால்… இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை
உனதுகண்ணில் வைத்தானோ… கண்ணில் வைத்தானோ

ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோ … நெஞ்சில் வைத்தானோ
(பெண் போனால்)

வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோ… இன்னும் சொல்லவோ

காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோ… என்ன சுகமோ..
(பெண் போனால்)