Lovena Lovethan Song Lyrics

லவ்வுனா லவ்வு பாடல் வரிகள்

Meera (1992)
Movie Name
Meera (1992) (மீரா)
Music
Ilaiyaraaja
Singers
Mano, Minmini
Lyrics
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டமெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒண்ணோடு ஒண்ணா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்

லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு

பட்டண காதலுக்கு பல பார்க்குகள் பீச்சு உண்டு
கிராமத்து காதலுக்கு குளம் குட்டைகள் கோயிலுண்டு

காதலர் எப்பொழுதும்
ஜாதி பேதங்கள் கண்டதில்லை
பாபரும் ராமரும் போல்
சண்டை பூசல்கள் வந்ததில்லை

ஒரு முஸ்லிமும் இந்துவுந்தான் சேரலியா

சேர்ந்து பிள்ளகுட்டி பெத்துகிட்டு வாழலியா

லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு 

ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு 

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

காதலர் கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பிப்போம்
தாஜ்மஹால் தன்னையே கட்சி
சின்னமாய் தேர்ந்தெடுப்போம்

தேர்தலில் போட்டியிட்டு
இந்த தேசத்தை நாம் பிடிப்போம்
காதலர் வீட்டுக்குத் தான்
ரேஷன்கார்டுகள் நாம் கொடுப்போம்

லவ் பண்ணாத பேர்களை நாம் தண்டிப்போம்

பொது மக்களும் நம் பக்கத்தில் தான் வா.. ஹோய்

லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு

ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு

ஆ.. ஆ.. ஆ.. ஆ.. பப்பர பப்பர
பா..பப்ப பப்பரபப்பபா..
பப்பரபப்பபா.. பப்ப பப்பரபப்பபா..
பா பா பப்ப பா...பப்ப பப்ப பா பப்பப்பா...

உல்லாச காதலரை கொல்லும்
வில்லனை கைது செய்வோம்
பொல்லாத தண்டனையாய்
டி.வி நாடகம் பார்க்கச் சொல்வோம்

தேசிய கீதமொன்று
இளையராஜாவை போடச்சொல்வோம்
காதலர் கூட்டத்திலே
அதை கட்டாயம் பாடச்சொல்வோம்

காதல் செய்யாத கல்யாணம் செல்லாது ஹா..

நம் கொள்கைகள் தோற்காது வா

லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு

முதுவட்டலெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட

அட ஒண்ணோடு ஒண்ணா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்

லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு