Chinna Chinnathai Song Lyrics

சின்ன சின்னதாய் பெண்ணே பாடல் வரிகள்

Mounam Pesiyadhe (2002)
Movie Name
Mounam Pesiyadhe (2002) (மெளனம் பேசியதே)
Music
Yuvan Shankar Raja
Singers
Hariharan, Yuvan Shankar Raja
Lyrics
சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்வதே தவறா…

உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே…
உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..

மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்தைகளை..
கண்கள் அறியலயா…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என்விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…

என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…