Unai Kanda Kanavondru Song Lyrics
உனைக் கண்ட கனவொன்று பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
- Music
- S. P. Kodandapani
- Singers
- S. Janaki, T. M. Soundararajan
- Lyrics
உனைக் கண்ட கனவொன்று
தேன் போலே
எனக்குயிரூட்டி அமுதூட்டும்
பால் போலே
துடிக்கின்ற என் கண்ணே ஏ பெண்ணே
நீ நினைக்கின்ற நினைவென்ன
சொல் என் முன்னே
ஏக்கமோ என் பெண்ணே......(உனைக்)
பலநாட்கள் நான் தூக்கம் இழந்தேன் கண்ணா
பாவை சிவந்தேன் கண்ணா
பார்க்கத் துணிந்தேன் கண்ணா
பயணமாகவே இந்து வந்தேன் கண்ணா
அப்பாவிப் பெண் ராதை ஒளியாகிறாள்
தனிமை கனலாகிறாள்
பருவச் சிலையாகிறாள்
ஆனந்தத் தேரேறி போராடினாள்
பெண்மைக்கு ஒரு பிறவி......(உனைக் )
வரமல்லவா உலகின் குலமல்லவா
உண்மை வளமல்லவா
பெருமைக்கு வணங்காத
சிலையல்லவா
நினைவில் வேய்ங்குழல் கேட்டு
எழுந்தேன் கண்ணா
உன்னை தொழுதேன் கண்ணா
துயரை மறந்தேன் கண்ணா
மனதில் ஆறுதல் ததும்ப வந்தேன் கண்ணா (உனைக்)