Anbu Nanbane Arumai Song Lyrics

அன்பு நண்பனே அருமை பாடல் வரிகள்

Chinna Chinna Aasaigal (1989)
Movie Name
Chinna Chinna Aasaigal (1989) (சின்ன சின்ன ஆசைகள்)
Music
Chandrabose
Singers
Mano
Lyrics
Ponnadiyan
அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே
உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம்
உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம்
உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்
விடிய விடிய மனைவி மடியில்
அசடு வழிய உறங்கும் மனிதன்

அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே

வெற்றி வீரனோ காதல் மன்னனோ
முழிச்சி எழுந்து மனைவியோடு என்ன பேசினான்
வெட்டிப் பயல் இவன் தொட்டும் பாக்கல
வெங்காயத்த உரிச்சிப் போட்டு தோல எண்ணினான்

முன்னாள் பேச்சுலர் என்ன கெஞ்சுறான்
கல்லூரியில் குடும்பம் நடத்த உரிமை கேக்கிறான்
பிள்ளையும் குட்டியும் பெற்றுக் கொள்ளவே
அனுமதிக்க வேண்டுமென்று மனுவும் போடுறான்

அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே
உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம்
உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

விடிய விடிய மனைவி மடியில்
அசடு வழிய உறங்கும் மனிதன்
அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே

வண்ண சிட்டுகள் எங்கள் கண்ணிலே
வந்து வந்து சிந்து பாடும் இளமை நெஞ்சிலே
கொள்ளை ஆசைகள் கூடு கட்டியே
கொஞ்சி கொஞ்சி காதல் பேசும் எங்கள் நினைவிலே

பிஞ்சிலே பழுத்தவன் என்ன செய்யுறான்
பிள்ளை பெற்ற மனைவிக்காக பொடவை தோய்கிறான்
மேனியில் பாதியாய் எளச்சுப் போயிட்டான்
குடும்ப பொறுப்ப சுமந்து சுமந்து களைச்சுப் போயிட்டான்

அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே
உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம்
உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

விடிய விடிய மனைவி மடியில்
அசடு வழிய உறங்கும் மனிதன்
அன்பு நண்பனே அருமை தோழனே
இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே