Vazhithunaiye Song Lyrics

வழி துணையே பாடல் வரிகள்

Dragon (2025)
Movie Name
Dragon (2025) (Dragon)
Music
Leon James
Singers
Sid Sriram
Lyrics
Vignesh Shivan
வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…நீயே

கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

உற்று உன்னைப் பார்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே

ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்

இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா?
உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே..

வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…

நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனி பாதம் வரை

எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

கர்நாடிக் முனங்கல் ….