Kanne Indru Song Lyrics

கண்ணே இன்று கல்யாண கதை பாடல் வரிகள்

Aanazhagan (1995)
Movie Name
Aanazhagan (1995) (ஆணழகன்)
Music
Ilaiyaraaja
Singers
Mano, Swarnalatha
Lyrics
Vaali
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி

பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி

குழு : …………………………

ஆண் : கோடைக்கானல் சாரலில்

ஆண் : ஆஅ……ஆஅ….ஆ….ஆ…..ஆ….ஆ….

ஆண் : கோடைக்கானல் சாரலில்
குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன்
சூடிக் கொள்ளும் நாளிது

பெண் : ஒவ்வொரு நாளும் காமதேவன்
தேர் வரும்
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம்
குழு : ஓஹோ….ஹோ….

ஆண் : உள்ளது யாவும் என்னை சேர்ந்த
சீதனம்
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
குழு : ஓஹோ….ஹோ….

பெண் : உன்னால் சின்ன சின்ன
எண்ணமெல்லாம் அரங்கேறுமே

ஆண் : பொண்ணே தமிழ் பெண்ணே
இன்று சொல்வாய் புது ராகமே

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
பெண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி

ஆண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

பெண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று

குழு : ………………………………

பெண் : நீயில்லாத நாளெல்லாம்
குழு : ஹா……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..

பெண் : நீயில்லாத நாளெல்லாம்
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம்
நெருப்பு மூச்சு வாங்கினேன்

ஆண் : எத்தனை காலம் பாவம் இந்த
தொல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : என்னிடம் கூற தோழி யாரும்
இல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….

பெண் : என்றென்றும் என்னை நீங்கிடாமல்
வாழ்ந்திடு
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : கற்பக சோலை காய்ந்திடாமல்
நீர் விடு
குழு : ஓஹோ….ஹோ….

ஆண் : வந்தேன் என்னை தந்தேன்
உன்னை கொண்டேன் இது போதுமா
பெண் : தொட்டால் விரல் பட்டால்
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி

பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி