Thottu Thottu Pallakku Song Lyrics
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது பாடல் வரிகள்
![Kadhal Rojave (2000)](https://www.varigal.com/upload/movies/kadhal-rojave.jpg)
- Movie Name
- Kadhal Rojave (2000) (காதல் ரோஜாவே)
- Music
- Ilaiyaraaja
- Singers
- S. P. Balasubramaniam, Sujatha Mohan
- Lyrics
- Muthulingam
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் மாதிரி..(தொட்டுத்)
ஹோய் என் மேல் ஒரு சாமரம் போல்
தென்றல் வந்து வீசுதே
மண் மேல் ஒரு மேனகை போல்
முன்னால் நின்று பேசுதே
உன்னால் ஒரு தாமரைப் பூ மொட்டவிழ்ந்து ஆடுதே
உள்ளே புதுத் தேன் சுரந்து ஓடை என ஓடுதே
வஞ்சி நீ பூச் செண்டு வந்ததோ பொன் வண்டு
கேக்குதே ரீங்காரம் மெல்லவே காதோரம்
இன்பமோ கொள்ளை இன்பமோ
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம் (தொட்டுத்)
முன்னம் மணி மாளிகையில்
வண்ணக் கிளி வாழ்ந்தது
இந்நாள் இது நீ விரித்த ஆசை வலையில் வீழ்ந்தது
எங்கே எது நேரும் என்று யாரும் சொல்லக் கூடுமோ
காலம் நமை சேர்த்து வைத்து நாளும் விளையாடுமோ
என்னையே பந்தாடும் மன்னவன் வாலிபம்
என்றுமே வந்தாடும் கண்மணி ஞாபகம்
பார்வையில் இன்ப ஊர்வலம்
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம் (தொட்டுத்)