Adi Kadhal Enbathu Song Lyrics

அடி காதல் என்பது பாடல் வரிகள்

Ennavale (2000)
Movie Name
Ennavale (2000) (என்னவளே)
Music
S. A. Rajkumar
Singers
Hariharan
Lyrics
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே

பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே

ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா

நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

காதல் மிருகம் என்பது
ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது

மீண்டும் மிருகம் தூங்கவே
காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட
மடிப்பொன்று கேட்குது

மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா

மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும்
விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா