Ethanai Kavignen Song Lyrics

எத்தனை கவிஞன் பாடல் வரிகள்

Savaale Samaali (2015)
Movie Name
Savaale Samaali (2015) (சவாலே சமாளி)
Music
S. Thaman
Singers
Karthik
Lyrics
Snehan
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும்
காதல் தோற்காமல் இருக்கு

எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல்
ரொம்ப சுகமா இருக்கு

இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும்
மிருகமாக நேரும்

அன்பே வா உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை
ஹே எதுவாக இருந்த போதிலும்
புதிய காதல்கள் தினமும் மலருதே

ஏ பொதுவாக தோற்றிட்ட காதலும்
நல்ல காவியம் சொல்லி போகுதே

பொய்களால் காதல் தொடங்கும் என்று
தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும்

பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும்
காதல் உயிர் வாழுதே

அன்பே உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும்
ஹே காதலால் அடங்கி போவதும்
அடிமை ஆவதும் தேவ ரகசியம்

ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தான் ஆனது
வாழ்வின் அதிசயம்

மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும்
காதல் என்ற ஒரு ஜீவன்

இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய
ஒரே வார்த்தை காதல்

அன்பே உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல