Kuyile Kuyile Poonguyile Song Lyrics

குயிலே குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்

Aan Paavam (1985)
Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Malaysia Vasudevan
Lyrics
Vaali
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா…….. வா……

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா….ஆஅ….

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு ஒன்ன
தொட்டாலே சிலிர்க்குதடி

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே
தள்ளி நில்லு

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி
கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற
சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு
பாட்டா படிக்கும்

ஆண் : நெஜமா நெஜமா
நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி
உயிர் வளர்த்தேன்

பெண் : இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
பெண் : ஒரு பூஞ்சோலையே
உனக்காகதான்
பூத்தாடுதே வா….ஆஅ….

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

பெண் : ராசாதி ராசனத்தான்
கட்டிக்கொள்ள
ராசாத்தி ஆசைப் பட்டா

ஆண் : ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா

பெண் : அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கு அத அழிச்சா
அவன் எழுதப்போறான்

ஆண் : பெண்ணே பழி
அவன் மேலே சொல்லாதடி
ஆண் பாவம் பொல்லாதது
கொல்லாதடி

பெண் : தவறோ சரியோ
விதி இது தான்
சரி தான் சரி தான்
வழக்கெதுக்கு

ஆண் : இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா…….. வா……

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே