Mayil Vanthu Song Lyrics

மயில் வந்து மாட்டிகிட்ட பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ 
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப

மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி 
எ ஏ ஏ ஏ...
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா

ஐ லவ் யூ பேபி ஐ லவ் யூ

மதம் கொண்ட யானையின் பாதத்தில் சேனைகள்
சிதைவதை நான் நியாயம் என்பேன்
இதம் சிண்டும் பாவையின் பார்வையில் காளையர்
சிதைவதை நான் மாயம் என்பேன்
மண்டி இட வைத்தால் அழகு தத்தை
மயக்கிட புரிந்தால் ஏதோ வித்தை
அபிநயம் இடையிலே ஆணவம் நடையிலே வலைகிறாள்
விழுகிறேன் வலையிலே தொழுகிறேன் காலிலே வதைகிறாள்

யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே 

ஏ மா ம மா மா... மா ம மா 

விழி என்னும் உளி கொண்டு மனம் தன்னை குடைகின்ற
புதிய சிற்பி வஞ்சி இவளே என்பேன்
வானத்தில் உதிர்ந்திடும் மின்னல் கீற்று மீண்டும் வாழ
இடை மீதிலே தஞ்சம் புகுந்த தென்பேன்
முத்துகளின் முகவரி தேடி சென்றேன்
இதழோரம் கிடந்திட அசந்து நின்றேன்
தங்கத்தின் சுரங்கமே தந்தத்தின் அரங்கமே அசைந்து வா
அமுதத்தின் விளக்கமே அழகதன் வெளிச்சமே அணைக்க வா

யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி