Vaazhve Ullaasame Song Lyrics

வாழ்வே உல்லாசமே பாடல் வரிகள்

Ellam Inba Mayam (1955) (1955)
Movie Name
Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
Music
Ghantasala
Singers
P. Leela
Lyrics
V. Seetharaman

ஹா.....ஹா....வாழ்வே
உல்லாசமே வெகு ஆனந்தமே
பொருள் மிகத் தேடி வாழ்வார் சிலர்
பொறாமை கொள்வாரே அவர்மேல் பலர்
காலம் செய் கோலங்கள் இதுவாகுமே...(ஹா...ஹா...)

ஒரு தாய் மகவினிற் பேதங்கள் ஏன்
விரோதம் கொண்டாடும் விவாதங்கள் ஏன்
காலம் செய் கோலங்கள் இதுவாகுமே
ஹா...ஹா....வாழ்வே உல்லாசமே வெகு ஆனந்தமே...

பிறவியினாலே தாழ்ந்தாலுமே
நிறைவான பொன்னோடு வாழ்ந்தாலுமே
காலம் செய் கோலங்கள் இதுவாகுமே
ஹா...ஹா....வாழ்வே உல்லாசமே வெகு ஆனந்தமே...