Veettukku Vilakku Yetri Song Lyrics

வீட்டுக்கு விளக்கு ஏற்றி பாடல் வரிகள்

Porantha Veeda Puguntha Veeda (1993)
Movie Name
Porantha Veeda Puguntha Veeda (1993) (பொறந்த வீடா புகுந்த வீடா)
Music
Ilaiyaraaja
Singers
Mano, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த
பெண் பிள்ளையே பெண் பிள்ளையே
கூட்டுக்குள் இருந்து கூடி கலந்திடு
வம்பில்லையே வம்பில்லையே

குடும்பத்தின் விளக்கே நம்பிக்கையின் இலக்கே
இல்லறத்தில் இணைந்திருந்து வாழ்க வாழ்கவே
அன்புக் கொண்ட தம்பதி
உள்ளங்கள் வாழ்க வாழ்கவே

பெண் : வீட்டுக்கு தலைமை ஏற்று நடத்திடும்
ஆண் பிள்ளையே ஆண் பிள்ளையே
பாட்டுக்கு தகுந்த தாளம் அமைந்திட
வம்பில்லையே வம்பில்லையே

பெண் : பெண்ணெனும் காவியத்தை
இளம் புன்னகை ஓவியத்தை
மெல்லிய மல்லிகை பூவென எண்ணிடும்
மாலையிட்ட மன்னனே

ஆண் : பது மல்லிகை பூச்சரமே
பச்சை மாவிலை தோரணமே
மன்னவன் நெஞ்சொரு பொன்னென எண்ணிடும்
மாலையிட்ட மங்கையே

பெண் : ஆணொரு பாதி பெண்ணொரு பாதி
ஆக்கிய கோயில் போல வீடாகுமே
ஆண் : ஊடல்கள் பாதி கூடல்கள் பாதி
காண்பவர் வாழ்வு தேனின் கூடாகுமே
பெண் : ஒற்றுமையாக மிக ஒட்டுறவாக
நேசங்கள் நீங்கிடாமல் வாழ்க வாழ்கவே

ஆண் : வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த
பெண் பிள்ளையே பெண் பிள்ளையே
பெண் : பாட்டுக்கு தகுந்த தாளம் அமைந்திட
வம்பில்லையே வம்பில்லையே

ஆண் : கண்விழி ரெண்டு உண்டு அதில்
தென்படும் காட்சி ஒன்று
ஒவ்வொரு கண்விழி ஒவ்வொரு காட்சியை
பார்த்ததில்லை என்றுமே

பெண் : இங்கு உள்ளது காலிரண்டு அது
சென்றிடும் பாதை ஒன்று
ஒவ்வொரு காலிங்கு ஒவ்வொரு பாதையில்
போனதில்லை என்றுமே

ஆண் : ஓர் மனதாக ஓருயிராக
சேர்ந்திங்கு வாழும் வாழ்வு தேனாகுமே
பெண் : கோபம் வந்தாலும் தாபம் வந்தாலும்
சீக்கிரம் தீர்ந்து போகும் தானாகவே
ஆண் : செந்தமிழ் போலே குளிர் தென்றலை போலே
பூமியில் நீண்ட காலம் வாழ்க வாழ்கவே

ஆண் : வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த
பெண் பிள்ளையே பெண் பிள்ளையே
பெண் : பாட்டுக்கு தகுந்த தாளம் அமைந்திட
வம்பில்லையே வம்பில்லையே

ஆண் : குடும்பத்தின் விளக்கே
பெண் : நம்பிக்கையின் இலக்கே
இரு : இல்லறத்தில் இணைந்திருந்து வாழ்க வாழ்கவே
அன்புக் கொண்ட தம்பதி உள்ளங்கள் வாழ்க வாழ்கவே

இருவரும் : வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த
பெண் பிள்ளையே பெண் பிள்ளையே
கூட்டுக்குள் இருந்து கூடி கலந்திடு
வம்பில்லையே வம்பில்லையே.....