Undaakki Vittavargal Song Lyrics

உண்டாக்கி விட்டவர்கள் பாடல் வரிகள்

Mugaraasi (1966)
Movie Name
Mugaraasi (1966) (முகராசி)
Music
K. V. Mahadevan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு


உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு


தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான்.... முடித்தான்.... ஹோய் ...
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன்
தன் நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்ததப்பா... ஹோய்...
(உண்டாக்கி)

கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
நல்ல செதி சொல்லும் ஜோஸியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ.... ஹோய்...

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு


பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வெளி எடுத்தான்
எடுத்தான்.... முடித்தான்.... ஹோய்...
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்.... ஹோய்...


உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு