Thaalelo Raajaa En Kanne Song Lyrics
தாலேலோ ராஜா பாடல் வரிகள்
![Aasai Magan (1953)](https://www.varigal.com/upload/movies/aasai-magan.jpg)
- Movie Name
- Aasai Magan (1953) (ஆசை மகன்)
- Music
- S. Dakshinamurthy
- Singers
- P. Leela
- Lyrics
- Kuyilan
தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா
தாலேலோ ராஜா....
உன் தந்தைதானே உனைத் தேடி வருவார்
பொருளெல்லாம் தருவார்
பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார்
வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே...
துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே
வெண்ணிலா போலே நீ வா வா
தாலேலோ ராஜா.....
எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே
உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று
வாடா நீ புகழ் பெற்று
கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே
அன்பே நீ வா வா தாலேலோ ராஜா.....(தாலேலோ)