Saagiren Song Lyrics

சாகிறேன் சாகிறேன் பாடல் வரிகள்

Takkar (2023)
Movie Name
Takkar (2023) (தக்கர்)
Music
Nivas K. Prasanna
Singers
Abhay Jodhpurkar, Swetha Mohan
Lyrics
Ku. Karthik
அடடா என் சாலை ஓரம்
அழகாய் போனதே
திசை யாவும் என்னை பார்த்து
தலை ஆட்டுதே

உடையாமல் எந்தன் வானம்
துயலாகி போனதே
தரை மீது மின்னல்
தோன்றுதே

பொழியாத தூரல் எந்தன்
நடு நெஞ்சில் தூறுதே
முடியாத இன்பம் வந்து
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே

சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்..ஆஆ
சாகிறேன்
நான் சாகிறேன்

அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே

உளராத ஏக்கம் ஒன்று
உறங்காமல் வாடுதே
மூச்சோடு முட்கள் பாயுதே

ஒரு கோப்பை அன்பை தேடி
சிறு நெஞ்சம் ஏங்குதே
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே

ஒரு பெண்மை கொண்ட ஆசை
கரைந்தோடி போனதே
மௌனத்தின் ஓசை கூட
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே

சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன்
நான் சாகிறேன்

அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே