Nenjukkuzhi Song Lyrics

நெஞ்சுக்குழிக்குள் பாடல் வரிகள்

Kangaroo (2014)
Movie Name
Kangaroo (2014) (கங்காரு)
Music
Srinivas
Singers
Haricharan
Lyrics
Sharanya Srinivas
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல்
உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும்
கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா

ஓ வெட்கமெல்லாம் போலி தானே
மேயச்சொல்லும் வேலி தானே
போ போ என்னும் வார்த்தைக்கெல்லாம்
வா வா என்னும் அர்த்தம் தானே
ஏரித்தண்ணீர் உண்டும் தாகம் போகவில்லை போடி
மொத்த தாகம் போக வேண்டும் முத்தம் ஒன்று தாடி
முத்தம் என்றால் வெறுப்பு அது எச்சில் வைத்த நெருப்பு
கெட்ட வார்த்தை சொல்லாதே
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா

ஓரம் சாரம் தொட்டுக்கொண்டே
பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன என்ன
ஓரம் தொட்டே உசுரு போச்சே
பாரம் தொட்டால் என்ன ஆகும்
ஹே தள்ளிப்போட காதல் ஒன்னும் தேர்தல் இல்ல வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி
மத்தை பெண்ணாய் நினைத்தாய்
பத்து விரல் துடித்தாய்
கன்னிப் பெண்ணின் உள்ளத்தை கலைக்கிறாய்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா ஹ..
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
ஹே… உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல்
உசுர மட்டும் விட்டு ஹே ஹே ஒவ்வொன்னாக தின்னும்
கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா