Chandrigaiyum Chandiranum Song Lyrics
சந்திரிகையும் சந்திரனும் பேரில் பாடல் வரிகள்
- Movie Name
- Porantha Veeda Puguntha Veeda (1993) (பொறந்த வீடா புகுந்த வீடா)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Mano, K. S. Chitra
- Lyrics
- Vaali
ஆண் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறுதானடி
சொல்லப்போனா உள்ளபடி ரெண்டும் ஒன்றுதானடி
ஸ்ரீதேவியும் ஸ்ரீலட்சுமியும் பேரில் வேறுதானடி
சொல்லப் போனால் இல்லறத்தில் ரெண்டும் ஓன்றுதானடி
ஒரு வீட்டில் நீ பிறந்தாயம்மா
மறு வீட்டில் நீ புகுந்தாயம்மா
இரு வீட்டிற்கும் புகழ் சேர்த்திடும்
ஒரு மங்கை நீ திருமங்கை நீ
குழு : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறுதானம்மா
சொல்லப்போனா உள்ளபடி ரெண்டும் ஒன்றுதானம்மா
பெண் : மங்கல நாணுடன் குங்குமம் மஞ்சளும்
மன்னவன் தந்தானே நான் புண்ணியம் செய்தேனே
மாமனைப் போல் எனை அத்தையும் மெச்சிட
லட்சியம் கொண்டேனே நான் நிச்சயம் வெல்வேனே
ஆண் : எத்தனை கத்தியும் முத்திய மண்டையில் ஏறாது
அத்தையின் புத்தியும் அப்படிதான் ஒரு நாய் வாலு
தந்தைக்கு வாய்த்ததை நான் என்ன சொல்வது பூந்தேனே
பிள்ளைக்கு வாய்த்தது பித்தளை அல்லடி பொன் தானே
பெண் : குற்றங்கள் பார்த்தால் சுற்றங்கள் இல்லை
அன்பிருந்தால் பண்பிருந்தால்
வள்ளுவன் சொல்லிய இல்லறம் வாய்க்கும்...
ஆண் : ஒவ்வொரு ஆண் மகன் வெற்றிக்கு
பின்னொரு பெண்மணி நிற்பாளே
ஓர் பாவலன் சொன்னானே
கண்மணி நானொரு காரியம் செய்திட
பின்னணி நீதானே உன் பாதியும் நான்தானே
ஆண் : மாதர்கள் சங்கங்கள்
மூட்டையை கட்டிடும் ஓர் நாள்தான்
பாதர்கள் சங்கத்தை ஆரம்பம் செய்வேன் பார் நீதான்
பெண் : ஏட்டிக்கு போட்டிகள்
ஏனிங்கு சொல்லுங்க மாமாவே
சீக்கிரம் அத்தைக்கு பக்குவம் வந்திடும் தானாவே
ஆண் : நல்லது கண்ணே நடக்கட்டும் பெண்ணே
உன் மனது பொன் மனது
எண்ணிய எண்ணங்கள் எப்பவும் கூடும்
குழு : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறுதானடி
சொல்லப்போனா உள்ளபடி ரெண்டும் ஒன்றுதானடி
ஸ்ரீதேவியும் ஸ்ரீலட்சுமியும் பேரில் வேறுதானடி
சொல்லப் போனால் இல்லறத்தில் ரெண்டும் ஓன்றுதானடி
ஆண் : ஒரு வீட்டில் நீ பிறந்தாயம்மா