Pothi Vecha Aasai Song Lyrics

பொத்திவச்ச ஆசை தான் பாடல் வரிகள்

Annakodiyum Kodiveeranum (2013)
Movie Name
Annakodiyum Kodiveeranum (2013) (அன்னக்கொடியும் கொடிவீரனும்)
Music
G. V. Prakash Kumar
Singers
G. V. Prakash Kumar
Lyrics
Arivumathi
ஆ: பொத்திவச்ச ஆசை தான் ஓத்துகிச்சு பேச தான்
சில்லுவண்டு பாத்து தான் சிரிக்கிறதே
பத்திவுட்ட ஆடு தான் பட்டி வந்து சேந்து தான்
பட்ட வழி யாவுமே இனிகிறதே

பெ: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குளி ஆராதோ
நத்த நண்டு போலே நான் நசுங்கி போரோனே

ஆ: பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீன நானா வதங்கி போரோனே

பெ: உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன்

ஆ: ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன்

ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ...

பெ: கொக்குக்கே மீனானேன் ஒரு கதையில் நானும் தான்
ஒப்புகே தாயானேன் உருகுது உசுரே

ஆ: சிக்குகே சீபானேன் தினருனேன் நான் தான்
வக்கத்து போனேனே வதங்குது மனசே

பெ: மின்னு தான் பாக்குறேன் மழை வர காணமே
கண்ணுக்குள்ள காடயா துடிக்கிறேனே

ஆ: அஞ்ச காய் போலவே சாஞ்ச தோல் காயுதே
குயிலு ஓடஞ்சு குமரி அழுக ஆறு ஆனதே... எ...

பெ: தன்டட்டி காதாக வளந்திருச்சு சோகம் தான்
மண்சட்டி ஓடாக ஓடஞ்சது உசுரே

ஆ: பன்ன பூ போல தான் பறந்துருச்சே காலம் தான்
செந்தாட்டி காயாக அருவுது மனசே

பெ: மின்னடான் பூச்சி தான் மனசுல மேயுதே
சொக்கட்டான் சோலியா சிரிக்கிறதே

ஆ: ஓட மீனும் பாஞ்சதே நானல் பூவும் சாஞ்சதே
கொலுத்தும் வெயிலா நடிக்கும் அழகு
சாரல் சாரலே... ஏ...
(ஆ: பொத்திவச்ச)

பெ: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குளி ஆராதோ
நத்த நண்டு போலே நான் நசுங்கி போரோனே
(ஆ: பத்து கிளி)

பெ: உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன்

ஆ: ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன்

ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ...