Kalangudhe Song Lyrics

கலங்குதே பாடல் வரிகள்

Vaathi (2023)
Movie Name
Vaathi (2023) (வாத்தி)
Music
G. V. Prakash Kumar
Singers
Vijay Yesudas
Lyrics
Yugabharathi
கலங்குதே! கண்கள் கலங்குதே!
கதறியே நெஞ்சம் நொறுங்குதே!
பொங்க வச்ச தங்ககுடம்
பொத்தலு விட்டுறிச்சே
மாசறியா வைரமணி
மண்ணலு சாய்ஞ்சிரிச்சே

அரிக்கேன் விளக்கே
இருட்டாயிறுச்சே!
பசும்பால் வெளுப்பே
கருப்பாயிறுச்சே!

கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம்பிறை ஓ…

புழக்கடையில முளச்சாலும்
துளசிக்கு ஓரு வாசம்
தெருப் புழுதியில் புரண்டாலும்
வாழுமே நிசம்

கொடி அடுப்புல புகப்போல
பொசுங்கு ஒரு கூட்டம்
களையெடுத்திட துணிஞ்சாலே
காலம் மாறிடும்

வயக்காட்டுல முளச்ச நாங்க
எந்த பாடமும் படிக்கல
நிதம் சேத்துல கிடக்குறோமே
அத சாமியும் தடுக்கல

காச கேக்கும் கல்வி
கனவாகி போனதே!
நீரு மேல போட்ட
ஒரு கோலமானதே!

காதறுந்த ஊசியிலே
சட்டைய தைகக்கனுமா!
கைய கட்டி வாய பொத்தி
நாங்களும் நிக்கனுமா!

தலையெழுத்தே புரியலனு
ஒப்பாரி வைக்குனுமா!

கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம் பிறை ஓ…