Karu Karu Song Lyrics

கரு கரு விழிகளால் பாடல் வரிகள்

Pachaikili Muthucharam (2007)
Movie Name
Pachaikili Muthucharam (2007) (பச்சைக்கிளி முத்துச்சரம்)
Music
Harris Jayaraj
Singers
Karthik, Naresh Iyer
Lyrics
Thamarai
கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ.. ஒரு மல்லி சரமே
நீ.. இலை சிந்தும் மரமே
என்.. புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏ ..நீ தங்க சிலையா
வெண் ..நுரை பொங்கும் மலையா
மன் ..மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ

தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

நீ ..ஒரு மல்லி சரமே
மண்ணில் ..இலை சிந்தும் மரமே
மின்னும் ..புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏ ..நீ தங்க சிலையா
வெள்ளை ..நுரை பொங்கும் மலையா
அம்பால் ..மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்

நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க

தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

தாமரை இலை நீர் நீ தானா (ஒரு மல்லி சரமே)
தனி ஒரு அன்றில் நீ தானா (இலை சிந்தும் மரமே)
புயல் தரும் தென்றல் நீ தானா (நீ தங்க சிலையா)
புதையல் நீ தானா (மதன் பின்னும் வலையா)

ஒரு மல்லி சரமே..