Varayo Varayo Song Lyrics

வாராயோ வாராயோ பாடல் வரிகள்

Apoorva Piravikal (1967)
Movie Name
Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
Music
S. P. Kodandapani
Singers
S. Janaki
Lyrics

வாராயோ வாராயோ வாராயோ
வாராயோ வாராயோ வாராயோ

அள்ளி மலர்க்கொடி துள்ளித் திரிவதை
ஆசைக் கண் கொண்டு பாராயோ
வாராயோ வாராயோ வாராயோ.....

நீரிலுள்ள வெள்ளி மீன்கள் ஓடி வந்தன
பாராயோ......பாராயோ......
ஓடி வந்து புள்ளிமானை சூழ்ந்து கொண்டன
பாராயோ......பாராயோ......(நீரிலுள்ள)

கன்னிப் பெண் கூட்டமடி
கண்டவர்க்கு ஆட்டமடி
காவியக் கலைஞனும் படித்தாண்டி
என்னைக் கவர்ந்த இன்பக் காட்சி
என்ன சுகமோ என் தோழி.......(வாராயோ)

நீந்துமோ யம்மா நினைக்குமோ
தாங்குமோ யம்மா தவிக்குமோ
ஜல் ஜல் ஜல் ஜல் நினைக்குமோ
ஜல் ஜல் ஜல் ஜல் தவிக்குமோ

முத்திருக்கும் செவ்விதழை கொத்த வந்ததோ
பாராயோ.......பாராயோ.......
சித்திரை தேரொன்று மூழ்கி விட்டதே என்று
இப்படி ஏனடி துடிக்கின்றாய்
மாறன் வந்ததும் காதல் கொண்டதும்
வாழ்க்கை நாடகம் என் தோழி.....(வாராயோ)