Enna Paada (Sad Song) Song Lyrics

என்ன பாடச் சொல்லாதே பாடல் வரிகள்

Aan Paavam (1985)
Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Vaali
பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

பெண் : அப்ப பாடிப் பறந்த குயில்
வாடிக் கெடக்குது
கண்ணீர் கடலில் இது
ஆடிக் கெடக்குது

பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

பெண் : பூவாரமும் நெனச்சு
பொன்னூஞ்சலும் நெனச்சு
புண்ணாகி போனதென்ன என் மனசு
எல்லாமே பூப்பதில்ல
பூத்தாலும் காய்ப்பதில்ல
அறியாம போனதுதான் என் தவறு

பெண் : வாராத தென்றலுக்கு
வழிப் பார்த்து காத்திருந்தேன்
இதழ் வாடும் பூக்களைப்போல்
நான் இருந்தேன்

பெண் : கானல் நீருக்குள்
நான் தூண்டில் போட்டேனே
மீனக் காணாமல்
நான் மாட்டிக் கொண்டேனே
சோகம் தாபம் நெஞ்ச வாட்டும்போது

பெண் : இப்போ பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

பெண் : ஒண்ணாகவே இருந்தோம்
ஒண்ணாகவே பறந்தோம்
உல்லாசக் கிளிகளைப் போல்
வாழ்ந்திருந்தோம்
ஊராரின் கண் படத்தான்
உள்ளங்கள் புண்படத்தான்
வெவ்வேறு திசைகளிலே
போய் விழுந்தோம்

பெண் : யாரோடு யாரக் கொண்டு
தெய்வங்கள் சேர்க்கும் என்று
புரியாம பாட்டுக்கள
நாம் படிச்சோம்

பெண் : பார்வை போதாதோ
நம் பாசம் பேசாதோ
வார்த்தை ஏனம்மா
இதில் மௌனம் மேலம்மா
ஒரு ராகம் ஒரு தாளம்
அது மாறிப்போச்சு இப்போ

பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

பெண் : அப்ப பாடிப் பறந்த குயில்
வாடிக் கெடக்குது
கண்ணீர் கடலில் இது
ஆடிக் கெடக்குது

பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு