Paadupattaa Thannaale Song Lyrics

பாடு பட்டா தன்னாலே பாடல் வரிகள்

Nadodi Mannan 1958 (1958)
Movie Name
Nadodi Mannan 1958 (1958) (நாடோடி மன்னன்)
Music
S. M. Subbaiah Naidu
Singers
T. V. Rathinam
Lyrics
N. S. Balakrishnan
ஆ... ஆ... பாடு பட்டா
பாடு பட்டா தன்னாலே 
பலனிருக்குது கை மேலே 

பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே 

பாடு பட்டா

கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே
குறுக்கு மூளையாலே 

கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே 
கை கூடாத காரியத்தையும் கூட்டி 
வைக்கும் பலே புள்ளி

பாடு பட்டா 
பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே 

பாடு பட்டா

காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசுவாரு 
காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசினாலும் காரியத்திலே
கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே 
ஒரு கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே

பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே 

பாடு பட்டா

அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு மகா வீரரு
அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு 
ஆயாசம் தீரவே ஆடும் பொண்ணு என்னையே
ஆயாசம் தீரவே ஆடும் பொண்ணு என்னையே
அசையாமே பாக்குறாரு கண்ணாலே
அசையாமே பாக்குறாரு ஆ... ஆ...

பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே 

பாடு பட்டா

ஆனா விலாசத்தோடு அவதாரம் எடுத்தவங்க 
ஆசைப்பட்டது அனுபவிக்க பொறந்தவங்க 
ரொம்ப நாணயக்கார பேர்வழிங்க 
நல்லது கெட்டது கண்டவங்க
ராப்பகலா திட்டம் போட்டு 
ராஜாங்கத்தே காப்பவங்க