Ada Ponnaana Manase Song Lyrics

அட பொன்னான மனசே பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
K. J. Yesudas, T. Rajendar
Lyrics
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களேன்
கண்ணீரை மருந்தாக்குங்களேன்
கண்ணீரை மருந்தாக்குங்களேன் 


அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை

ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
பச்சை புள்ள போல அழுவாத
பாவம் பூவை போல காயாத
பச்சை புள்ள போல அழுவாத
பாவம் பூவை போல காயாத

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை 

பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
அதை காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே
அதை காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை

சமைச்சு வச்ச மீனு குழம்ப 
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
சமைச்சு வச்ச மீனு குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை எழவு என்றா
அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை எழவு என்றா

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை