Manidhan Ninaippadhundu Song Lyrics
மனிதன் நினைப்பதுண்டு பாடல் வரிகள்
- Movie Name
- Avanthan Manithan (1975) (அவன்தான் மனிதன்)
- Music
- M. S. Viswanathan
- Singers
- T. M. Soundararajan
- Lyrics
- Kannadasan
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...
இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு
மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என்
குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா